Tuesday, 23 October 2012

தேவதையின் அரவணைப்பு

தேவதை ஒருத்தி
தேன் உதடுகளால்
என் கண்ணீரில்
முத்தமிட அது
சத்தமில்லாமல்
தத்தம் கண்களுக்கு
திரும்பியது.
அவளின் இமைகள்
மயிலிறகாய்  மாறி
முகம்தனை வருட
வெண்பனி பட்டது
போல் சிலிர்ப்பு .
அவள் தலைசாய்த்ததும்
தோகை முளைத்தது
என் தோள்களுக்கு.
என்னை நேசமாய்
தழுவிய பொழுது
தழுதழுத்தது என்
குரல், அதிர்ந்தது
தேகம், உதிர்ந்தது
ஆனந்த கண்ணீர்
புரிந்தது எனக்கு
அவளது நேசம்

Monday, 15 October 2012

தேடல்கள்

தேடியது எதை
என்பதை எண்ணி
எண்ணி நித்தம்
வாடியது மனது
விடைகாணமல்?
உன்னை நான்
நாடியது நங்கையே
தேடலின் விடை
காணவே எனக்கு
கூடியது காதலும்
காமமும் ஆனால்
நான் தேடியது
இதுவல்லவே
மூடியது கண்கள்
மூண்டது கனல்
என்னுள் எண்ணங்கள்
மாண்டது பரசிவ
வெள்ளத்தில் ஆன்மா
மூழ்கியது ............... 

சகிப்புத்தன்மை

போற்றுதற்குரிய பெரியவரே
பொறுமையின்றி இளைஞரின்
கூற்றுதனக்கு சிறிதும் செவி
சாய்க்காமல் அவர்களை
தூற்றுவதற்கு துணைபோகிறார்
சேற்றைவாரி இரைத்தல்போல
பொல்லாங்கு நித்தம் பேசி
நாற்றமடிக்கும் வாயை
வாயார புகழ்ந்திடுவார்
மாற்றுவதற்கு முயன்றேன்
தோற்றுபோனேன் அடிப்படை
குணங்களை மாற்ற இயலாது
கண்கள் குளமாயின நீர்
ஊற்று பொங்கி வழிய (எனை)
தேற்றுவதற்கு எவருமுண்டோ ?

Saturday, 25 August 2012

வானவில்நிகழ்வுகள்

வானவில்லாய் தோன்றி
மறைந்தது நிகழ்வுகள்
பல என்  வாழ்விலே
பிறப்பெனும் வாசல்
நுழைந்து ஒருவழிப்
பாதையில் பயணம்
செய்து எதிர்வரும்
எதிர்பாரா இன்பதுன்ப
விபத்துக்களை எதிர்கொண்டு
பணி  செய்து பிணிமூப்பெய்தி
நட்பெனும் நதியில் நீராடி
காதலெனும் கடலில் மூழ்கி
மடல்கள் பல அனுப்பி
பகையெனும்  புகையில்
திணறி  நன்றியில்லா
துரோகங்களில் துவண்டு
கோரங்கள் பலகண்டு
பாரமான நெஞ்சுடன்
வாழ்கை பயணம்
வாட்டி  எடுத்தாலும்
வாழ்கிறேன் உலகில்
வாழ்வியலின் அர்த்தத்தைத்
தேடி ..............., 

Friday, 13 April 2012

என்ன செய்ய போகிறாய்

உண்மை என்பது
துளியளவும்
உன் பேச்சிலில்லை
என்னவளே
உடைந்தே விட்டேன்

நன்மை செய்தே(னே) ன்
நாள்தோறும்
நம்பாமல் விட்டுவிட்டாய்
வாழ்க்கையெனும்
நட்டாற்றில் தன்னை

"என் பெண்மை
உனக்குமட்டும்
தான்" என்றுரைத்தாய்
ஆனளவும்  ஏமாற்றமே 
பரிசாய் தந்தாய்

வன்மையாய் நடந்த
வஞ்சகர்க்கும்
நன்மையே செய்தாய்
மன்னித்தாய்
துரோகங்களை

உன்தன்மையை
புரிந்து கொள்ள
முடியவில்லை
துன்பத்தில் உழலும்
என்னால்.............


Tuesday, 10 April 2012

ஞானத்தை தேடி

மனமே நீ எங்கு இருக்கிறாய்
தங்கு தடையின்றி எண்ணங்கள்
உன்னில் உதித்து அலைஅலையாய்
வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது

எண்ணங்களே உங்களிலும்
பிரிவினை நல்லவையாம்
கெட்டவையாம் இவ்விரண்டையும்
எங்கனம் பிரித்து கொள்வது

கெட்ட எண்ணங்கள் என்று
சட்டம் பேசுபவர்களே அவை
எங்கிருந்து தான் தோன்றுகின்றன ?
தோண்டி பார்த்தேன் அதற்கு
பதில் ஏதுமில்லை  !

சூன்ய நிலை சமாதி நிலை
என்றே கூறுகிறார்கள்
எண்ணங்களற்ற நிலை
என்றும் பகர்கிறார்கள்
கண்களை மூடினால்
என்முன்னே பாய்கிறது
எண்ணங்கள் அலையாய் !

தவங்கள் பல புரிந்தேன்
யோகங்கள் தினமும்
மேற்கொண்டேன்
ஞானம் அடைய
எதுதான் வழி
ஞாலத்தில் நானும்
தேடி அலைகிறேன்.......

Wednesday, 14 March 2012

மனதில் அவள்

நெருஞ்சி முள்ளாய் இருந்த-மனதில்
குறிஞ்சி மலராய்
மலர்ந்து மணம் வீசுகிறாய் தினம்
கதை பேசுகிறாய்

குருட்டாயிருந்த என்மனதில்
வருடுமுன் நல்அன்பினில்
வருத்தம் நீக்கினாய் சடுதியில்
வருடகணக்கில் உன் அன்பில்
கட்டுண்டு கிடப்பேன் நான் .............

கெஞ்சும் என் கண்களை
கொஞ்சும் உன் கண்களால்
தஞ்சம் அடைய செய்கிறாய்
நெஞ்சம் முழுதும் காதலால்
மஞ்சத்தில் தூக்கமின்றி
தவிக்கவைக்கிறாய்.......


Wednesday, 22 February 2012

சமத்துவம்

உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்பதேயில்லை எனும்போது
அனைவரும் சமம் என்ற பேச்சுக்கே
இடமில்லை கண்டீர்

அவரவர் செய்யும் தொழிலில்
அவரவர் திறமைசாலிகளே இதில்
எங்கிருந்து பேசுகிறீர்கள்
ஏற்றத்தாழ்வுகள்

ஒவ்வொரு உயிரினமும்
தனித்துவமான உண்மை
உன்னதமானது எதுவெனில்
உயிர்களனைத்தையும் நேசிப்பதாம்


நடைமுறையிலுள்ள சாதிகளை
ஒழித்தாலும் அவரவர்
தொழிலுக்கு ஏற்ப புதுப்புது
பிரிவுகளை படைத்திட்டார்


உலகில் நலிந்தோரில்லை
என்ற நிலை உண்டானால்
வள்ளல்களுக்கு வாயிப்பில்லை
உதவிப்புரிந்து உளம்மகிழ

தன்குடும்பதைக் கூட பாராமல்
ஊருக்குழைப்பவன் என பாரட்டிற்கு
ஏங்கி எவர்க்கும் பயன்படாது
எத்தர்களை ஏற்றிவிடும் சீமான்கள்


பகிர்ந்தளிக்கும் பண்பாடு
தழைத்தோங்கினால் பணக்காரர்கள்
தர்மம் செய்து பரலோகம்
செல்லும் ஆசை நிராசையாகும்


தானதர்மங்கள் புரியாவிட்டாலும்
சமுதாயத்திற்கு உங்கள் பங்கு
சரியாக உங்களிடம் எடுக்கப்படும்
சமத்துவம் என்றும் காக்கப்படும்


Wednesday, 25 January 2012

காதலியே ....

என்ன பிடிக்கும் என்னவளே
உனக்கு என்ன பிடிக்கும்
என்னைத்தவிர எல்லாம்
பிடிக்கும் உனக்கெல்லாம்  பிடிக்கும்

எப்படி வெளிப்படுத்த என் காதலை
எப்படி வெளிப்படுத்தி  சொன்னாலும்
புரிவதில்லை உனக்கு கண்ணீர்தான்
சொரிகிறாய் உயிரே  எந்நாளும்

வெட்கத்தை விட்டு கெஞ்சினேன்
நாணத்தை விட்டுவிட மிஞ்சுகிறாய் - என்
ஆணவம் உன்னிடம் உடைந்தது
ஆனாலும் உன் மனம் இளகவில்லையே 

இருண்டது  என் கண்கள் உன்னை
காணாமல் கண்டதும் பேச இயலாமல்
வறண்டது என் நாவு காதல் மழையின்றி
மருண்டது என் மனம் ஆசைகொண்டே

நாலுபேர் பேசுவதை எண்ணி
நாணும் நங்கையே நாளும் உன்
துயர் துடைக்க நாட்டவர் யாரும் 
வரமாட்டார் அடைக்கலம் நானே

காதலில் மட்டும் தோல்விதான்
காலம் முழுதும் இன்பசுமையாய்
காலனிடமிருந்து அழைப்புவரும் வரை
கணத்து கொண்டிருக்கும் எந்நாளும்......

என் காதலை ஏற்க மறுத்த
சூழ்நிலை கை(ர )தியே உனை
சூழும் துன்பத்தை துடைப்பேன்
சூழ்ச்சியில் சிக்க விடமாட்டேன்