Wednesday 22 February 2012

சமத்துவம்

உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்பதேயில்லை எனும்போது
அனைவரும் சமம் என்ற பேச்சுக்கே
இடமில்லை கண்டீர்

அவரவர் செய்யும் தொழிலில்
அவரவர் திறமைசாலிகளே இதில்
எங்கிருந்து பேசுகிறீர்கள்
ஏற்றத்தாழ்வுகள்

ஒவ்வொரு உயிரினமும்
தனித்துவமான உண்மை
உன்னதமானது எதுவெனில்
உயிர்களனைத்தையும் நேசிப்பதாம்


நடைமுறையிலுள்ள சாதிகளை
ஒழித்தாலும் அவரவர்
தொழிலுக்கு ஏற்ப புதுப்புது
பிரிவுகளை படைத்திட்டார்


உலகில் நலிந்தோரில்லை
என்ற நிலை உண்டானால்
வள்ளல்களுக்கு வாயிப்பில்லை
உதவிப்புரிந்து உளம்மகிழ

தன்குடும்பதைக் கூட பாராமல்
ஊருக்குழைப்பவன் என பாரட்டிற்கு
ஏங்கி எவர்க்கும் பயன்படாது
எத்தர்களை ஏற்றிவிடும் சீமான்கள்


பகிர்ந்தளிக்கும் பண்பாடு
தழைத்தோங்கினால் பணக்காரர்கள்
தர்மம் செய்து பரலோகம்
செல்லும் ஆசை நிராசையாகும்


தானதர்மங்கள் புரியாவிட்டாலும்
சமுதாயத்திற்கு உங்கள் பங்கு
சரியாக உங்களிடம் எடுக்கப்படும்
சமத்துவம் என்றும் காக்கப்படும்