Tuesday 23 October 2012

தேவதையின் அரவணைப்பு

தேவதை ஒருத்தி
தேன் உதடுகளால்
என் கண்ணீரில்
முத்தமிட அது
சத்தமில்லாமல்
தத்தம் கண்களுக்கு
திரும்பியது.
அவளின் இமைகள்
மயிலிறகாய்  மாறி
முகம்தனை வருட
வெண்பனி பட்டது
போல் சிலிர்ப்பு .
அவள் தலைசாய்த்ததும்
தோகை முளைத்தது
என் தோள்களுக்கு.
என்னை நேசமாய்
தழுவிய பொழுது
தழுதழுத்தது என்
குரல், அதிர்ந்தது
தேகம், உதிர்ந்தது
ஆனந்த கண்ணீர்
புரிந்தது எனக்கு
அவளது நேசம்

Monday 15 October 2012

தேடல்கள்

தேடியது எதை
என்பதை எண்ணி
எண்ணி நித்தம்
வாடியது மனது
விடைகாணமல்?
உன்னை நான்
நாடியது நங்கையே
தேடலின் விடை
காணவே எனக்கு
கூடியது காதலும்
காமமும் ஆனால்
நான் தேடியது
இதுவல்லவே
மூடியது கண்கள்
மூண்டது கனல்
என்னுள் எண்ணங்கள்
மாண்டது பரசிவ
வெள்ளத்தில் ஆன்மா
மூழ்கியது ............... 

சகிப்புத்தன்மை

போற்றுதற்குரிய பெரியவரே
பொறுமையின்றி இளைஞரின்
கூற்றுதனக்கு சிறிதும் செவி
சாய்க்காமல் அவர்களை
தூற்றுவதற்கு துணைபோகிறார்
சேற்றைவாரி இரைத்தல்போல
பொல்லாங்கு நித்தம் பேசி
நாற்றமடிக்கும் வாயை
வாயார புகழ்ந்திடுவார்
மாற்றுவதற்கு முயன்றேன்
தோற்றுபோனேன் அடிப்படை
குணங்களை மாற்ற இயலாது
கண்கள் குளமாயின நீர்
ஊற்று பொங்கி வழிய (எனை)
தேற்றுவதற்கு எவருமுண்டோ ?