Wednesday, 30 July 2014

பிரிவு

கண்விழித்ததும் கலைந்திடும்
கனவல்ல என் காதல்

கண்ணீராய் கரைந்திடும்
கவலையுமல்ல  என்  காதல்

கண்வழி புகுந்து கருத்து ஒருமித்து
வந்ததல்ல என் காதல்

 காமம் தலைக்கேறி (அதனை) கழிக்க
 கனிந்ததல்ல என் காதல்

நம்மை காலம் சேர்த்தது
இது பிரியும் காலமென்றால்
அதை ஏற்பதும் முறையே!


Wednesday, 9 April 2014

விடியல்

அதிகாலை வேளையிலே இருள் சூழ்ந்திருக்க 
மதியும் வெள்ளியும் விடுமுறைக்கு சென்றிருக்க 

பொதியும் கால்கள் மணலிலே திணறிட    - என் 

மதியும் சோர்வுற்று உறங்கிடும் வேளையிலே 

நதியருகே மின்னலென மின்மினிகள் கண்டதும் 

உதித்திடும் ஆதவன் கிழக்கே சற்றுநேரத்தில் (என்றே) 

உதித்தது நம்பிக்கைகதிர்கள் என்னுள்ளே -அதனை

விதைத்தது மின்மினியின் சிறு ஒளி அன்றோ !